செத்தது நமது ரத்தத்தின் ரத்தம்
அத்தனை நடந்தும் ஈங்கென்ன செய்தோம்
வாக்கைப் போட்டு வழக்கை முடித்தோம்
எட்டுக் கோடி இங்கே இருந்தும்
எதிர்த்த வீட்டு நெருப்பை அணைக்க
மனதில் கூட நினைக்க மறந்து
மயிலும் மானும் ஆடக் கண்டோம்
வந்தவர் பல்கி வள்ர்ந்த தனால்முன்
இருந்தவர் சுருங்கி எரும்பாய்ப் போக
எல்லாம் எமக்கே என்றே சொன்னார்
உலகும் அதற்கு உறுதுனை போச்சு
அங்கே தமிழன் அடைந்தால் வெற்றி
இங்கே தமிழன் எழுச்சி கொள்வான்
என்றே எண்ணி இந்திய நாடும்
இனக்கொ லைக்கு எதுகை செய்ய
தரணி வென்ற சோழன் போல
தமிழைக் காக்க வந்த தலைவனை
கட்ட பொம்மனின் எட்டப்பன் போல
காட்டிக் கொடுத்தான் கருணா அம்மான்
அய்யகோ என்ற அழுகுரல் கேட்டு
ஐநா சபையும் அதிர்ந்தது லேசாய்
இருந்தும் என்ன இந்திய தேசம்
சைனா செய்த சதியில் வீழ்ந்தது
நன்றே எல்லாம் நடந்தது என்று
நம்பி யாரும் நடித்தான் நன்றாய்
பான்கீ மூனும் பல்லை இளித்தான்
பாவம் செய்தான் கொடிய சாத்தான்.
No comments:
Post a Comment