Wednesday, December 30, 2020

பொன்னையா

பொன்னையா - நீ

பொன் அய்யா.

பழகும் அன்பில் - நீ
பொன் அய்யா.
பாசம் செய்வதில் - நீ
பொன் அய்யா.

நட்பின் மாண்பில் - நீ
பொன் அய்யா.
நல்லவர் நடுவில் - நீ
பொன் அய்யா.

உள்ளம் உயர்வில் - நீ
பொன் அய்யா.
உலகம் வியக்கும்- நீ
பொன் அய்யா.

நேசம் நேர்வு - நீ
பொன் அய்யா.
நேற்று இன்று - நீ
பொன் அய்யா.

விண்ணை வென்று
பொன்னையா 
வேகம் கொண்டு
பொன்னையா.

மகளுக்கு மணமுடித்து
பொன்னையா    
மாண்புடன் வாழ்க
பொன்னையா.
 
இன்று போல் என்றும்
பொன்னையா
நன்றே வாழ்க
பொன்னையா.

வாழ்க வளமுடன்
பொன்னையா
வாழ்க பல்லாண்டு
பொன்னையா.

பி எஸ் ஜி என்னும் பேரிளம்பெண்

 Good bye 2020


It's been 38 years
Since we left PSG
Me, Hals and few likes
Spent few years more. 
Life has been roller coaster. 
After spending years at 
Patna, Blore, Hyd and KL
Back to Cbe in 2007.
For the past 5 years,
Fortunately working with
Young minds at Institutions
Each has its own greatness,
But on every count,
PSG counts little more,
Its no doubt that
The life at PSG was great
Its greater than even
That they have today.
Thougtht I should pen
My LOVE to PSG 
And the கவிதை is here.
Hope you too have the same feel.
My only request is 
Please read to the end,
You will not regret
Thank you all.

தீராக் காதல்  

பிஎஸ்ஜி என்னும் 
பெயரில் இருக்கு
பெற்றோர் எல்லாம்
பேணும் செருக்கு...

எட்டில் ஒன்றாய் 
இருந்தது அன்று
எட்டுத் திக்கும் 
இணையில்லை இன்று...

தொட்டில் சேயாய் 
நுழைந்த நம்மை
தட்டி எழுப்பி 
தாலாட்டுப் பாடி...

கட்டி அணைத்து 
கலைகள் சொல்லி
குழப்பம் நீக்க 
விளக்கம் அளித்து...

மனிதம் போற்றும் 
மாண்பு சொல்லி
மன்றம் தன்னில் 
முன்னே நிறுத்த...

அன்னைக்கு ஈடாய் 
அருந்தவம் செய்து
ஏணியாய் நின்று 
ஏற்றி வைத்த...

தெய்வம் என்றால் 
அதுவும் நீயே - எம்மை 
சிலையாய் செதுக்கிய
சிற்பியும் நீயே...

வந்தவர் எல்லாம்
வென்றார் சென்றார் - இன்னும்
வரிசையில் நிற்போர்
ஆயிரம் ஆயிரம்...

எத்தனை புதிதாய்
வந்த போதிலும்
இணையோ ஈடோ 
இல்லை உனக்கு...

எழுபது வயது
என்பார் உனக்கு - எனினும்
இளமையும் எழிலும்
இன்னும் இருக்கு...

அறுபது வயசு
ஆச்சு எனக்கு - இருந்தும்
ஆசை உன்மேல்
அதிகம் ஆச்சு...

காலம் கடந்தும்
காதல் வருகுது - கொஞ்சம்
கருணை செய்தால்
இளமை திரும்பும்...

இன்னொரு வாய்ப்பு 
இல்லை தெரியும் - அதுவும்
இயற்கை இல்லை
என்ன செய்வேன்...

இன்னொரு பிறவி
எடுத்து மீண்டும்
உந்தன் மடியில்
உறங்க வருவேன்...

உறவைக் கேட்டு
ஒரு கால் நிற்பேன்
ஒருக்கால் மறுத்தால்
உலகை வெறுப்பேன்...

இன்னொரு வேண்டல்
இருக்கு எனக்கு
இதே நண்பர்கள்
வேண்டும் மீண்டும்...

Sunday, December 27, 2020

நானும் ஒரு கவிஞன்

செந்தமிழ் சொல்லெடுத்து 
சேதிசில சேத்து வச்சு
எதுகையினை எட்டித் தொட்டு
மோனைதனை முத்த மிட்டு.

வார்த்தைகளை மடக்கிப் போட்டு
வாழ்க்கைதனை சொல்ல வந்த
நானும் ஒரு கவிஞன்
நம்புங் கய்யா நம்புங்க.

தில்லையில் கூத்தனே
தென்பாண்டி நாட்டானே
அல்லல் அறுப்பானே
ஆண்டவனே வேண்டுகிறேன்.

சித்தர்கள் வாழ்ந்த நிலம்
சிவனே எம்சொந்தம் 
அத்தன் அருள் இருந்தால்
சித்தம் நிலையாகும்.

ஆறடி நிலம் கூட 
ஆண்டவர்க்கு சொந்த மில்லை.
ஓர்பிடி சாம்பல் கூட
உ ந்தனுக்கு மிச்சம் இல்லை.

மண்மேல் ஆசை 
மரணம் வரை விடுவதில்லை 
பொன்மேல் ஆசை 
புத்தி கெட்டும் போவதில்லை..

பெண்மேல் ஆசை 
பித்தனையும் விட்ட தில்லை
பெற்றதனால் மட்டும்
பிள்ளை உந்தன் சொந்த மில்லை.

அத்தை மகள் என்பார்
ஆசையிலே பேதலிப்பார்
சித்தம் தெளிந்து விட்டால்
நித்தம் புலம்பி நிற்பார்.

சுந்தரத்தின் மோகம்
சுட்ட பின்பு காணவில்லை
அந்தரத்தில் நானும்
சிந்தனைகள் ஒன்னும் இல்லை.

எத்தனை ஓட்டம்
எதைத்தேடி இந்த ஓட்டம்
இளமை போன பின்பு
இச்சை கூட மிச்சம் இல்லை.

வானம் எவருக்கும்
வஞ்சனைகள் செய்வ தில்லை
வந்தவர்கள் யாரும்
நித்தியமாய் நின்ற தில்லை

நாளைய தினம் என்று
நம்கையில் ஒன்னும் இல்லை
இன்றைய தினம் ஒன்றே
இருக்குதப்பா நம்கையில்.

வந்த வழியெல்லாம்
நிந்தனைகள் பல உண்டு
சிந்தையில் சிவன் இருந்தால்
விந்தைகள் பல கூடும்.

Friday, December 25, 2020

2020

இருபது இருபது எப்படி விளிப்பது
ஒன்னும் புரியல ஊருக்கும் விடியல...

பிரமாண்டம் என்றார் ஜனவரியில் - தடம் 
புரண்டது என்றார் பெப்ருவரியில்
மணிஅடி என்றார் மார்ச்சில் - வேண்டும்
மருந்துகள்  என்றார் ஏப்ரலில்...

மேம்படும் என்றார் மேயில் - மெல்ல
மெலியும் என்றார் ஜுனில்
குறையும்  என்றார் ஜூலையில் - கோபம்
குறைத்திடு  என்றார் ஆகஸ்டில்...

சிதைந்து மெலிந்தது செப்டம்பர் - சீக்கிரம்
அசைந்து முடிந்தது அக்டோபர்
நகர்ந்து போனது நவம்பர் - நல்ல
நாள்தான் வருமோ விரைவில்...

டிசம்பரும் முடியப் போகுது - நம்
சிந்தையில் மிரட்சி ஓங்குது
முடியுமா இந்த சோகம் - விரைவில்
விடியுமா நமக்கு நாளும்...

Saturday, December 12, 2020

 தேர்தல் வருதுங்கோ

இன்னும் ஓர் சில மாதம்
இங்கே ஒரு தேர்தல் வரும்
எங்கேயும் இல்லாத
இம்சைகளும் கூட வரும்...
வெள்ளையர் கூட
நல்லவர் ஆவார் - இந்த
கொள்ளையர் முன்னாலே - அந்த
கூவமும் பின்னாலே...
பிரித்து ஆள ஒரு கூட்டம்
பெரும் சூழ்ச்சி செய்யுது
பேதம் சாதி என்று சொல்லி
பேயாட்டம் போடுது...
அடிமையாகி ஒரு கூட்டம்
அம்மணமாய் திரியுது
அடகுவைத்த நம் மானம்
அந்தரத்தில் தொங்குது...
ஆட்டு மந்தை காவலுக்கு
ஓநாய்கள் துடிக்குது
ஆந்தைகளும் கூகைகளும்
ஓலமிட்டு மிரட்டுது...
புதுப்புதுசா நரிகள் கூட்டம்
புறப்பட்டு வருகுது
போக்கத்த மனிதருக்குள்
பொய்மையை விதைக்குது...
வறண்டு விட்ட வானத்தில்
வல்லூறு பறக்குது
வஞ்சனைகள் பலசெய்து
வன்மத்தை விதைக்குது ...
எருக்கம் பூவுக்குள்
எண்ணெயைத் தேடுது
எட்டப்பர் கூட்டத்தை
ஏற்றிவிட துடிக்குது...
புல்லுருவிக் கூட்டம் ஒன்னு
பொய்மைக்கு மணி அடிக்கும்
நல்லருவி என்று சொல்லி
நாற்றத்தை விலை பேசும்...
கூத்தாடிக் கூட்டம் ஒன்னு
கொட்டம் அடிக்க வரும்
கோவணத்தில் கூட
ஆவணத்தை மறைத்து விடும்...
மணலை விழுங்கி விட்டு
மடைகட்ட நீர் தேடும்
அனலுக்குள் ஈரத்தை
அடைகாக்க துதி பாடும்...
வானரக் கூட்டம் - ஒன்னு
வாலை ஆட்டி வரும்
வன்மத்தை விதைத்து விட்டு
வானத்தை விலை பேசும் ...
வக்கற்ற மக்களின்
வாக்குக்கு விலை வைக்கும்...
வாய்ப்புகள் வந்து விட்டால்
வாட்டி வதை வதைக்கும்...
நாளும் பொழுதும் நம்மை
நசுக்கி ரணம் கொடுக்கும்
நல்லது வேண்டு மெனில்
நாம் தான் விழித்தெழனும்...
கவரிமான் இனத்தை
கயமை வந்து விழ்த்திடுமா
நற்றமிழ் நாட்டை - சிறு
நரிக்கூட்டம் ஆளனுமா...
உலகத்தை ஆண்ட இனம்
ஒன்றுபடும் நேரமிது
சதிகாரக் கூட்டத்தை
சத்தம் இன்றி வென்று விடு...
உன்னால் முடியும் என்று
உணர வேண்டும் நீ இன்று
நல்லவர் தேடி உந்தன்
நல்வாக்கைப் போட்டுவிடு...
இம்முறை தோற்று விட்டால்
இறைவனும் உனைக் காவான்
கண்கள் குருடானால் - நம்
கண்ணீரும் வீணாகும்...

 கடலுக்கு மண நாள்

கல்யாண நாள் இன்று
கடல் லதா தம்பதிக்கு...
பல்லோரும் வாழ்த்தி விட்டார் 
பகல் உதயம் ஆனமுதல்...

எல்லோரும் வியக்கும்
நல்லோனை வாழ்த்துதற்கு...
நமக்கும் ஒரு ஆசை...
நல்ல தமிழ் சொல்லெடுத்து...

எல்லோரும் உனை அறிவார்
எழுபத்து ஏழு முதல்...
என்போன்ற சிலருக்கு
இன்னும் ஒரு நாலாண்டு...

எழுபத்து மூனு 
         ஜூலை பதிமூனு ...
உன்னை நான்கண்ட 
         உன்னதநாள் அன்று...

பால்கோவா நகரத்து
பள்ளி ஒன்றில் சேர்ந்த  நாள்...
ஒன்பது படிப்பதற்கு
உயர்பள்ளி சென்ற நாள்...

வீட்டைப் பிரிந்து 
வெளியில் வந்த முதல்நாள்...
விண்ணும் மண்ணும்
விம்மி விம்மி நின்ற நாள்...

விடுதியில் சேர்த்து விட்டு - தந்தை
விடைபெற்று போன பின்பு...
கூண்டில் அடைபட்ட
கோழியாய் நின்ற போழ்து...

நானும் புதுசென்று
நட்புக்கரம் தந்தவன் நீ...
அன்றுமுதல் இன்றுவரை
அன்பனாய் நண்பனாய்...

பூப்பந்து விளையாட்டில்
புகழ்ச்சிகரம் தொட்டவன்...
பொல்லாங்கு இல்லாது
எல்லோர்க்கும் நல்லவன்...

பார்த்தவுடன் பிடித்துவிடும்
பண்புள்ளம் கொண்டவன்...
பலர்கூட இருந்தாலும்
பாசத்தில் வென்றவன்...

எல்லா நிலையிலும்
எம்மோடு இருப்பவன்...
எங்கே இருந்தாலும்
எம்நினைவில் நிற்பவன்...

நாப்பத்தி ஏழுஆண்டு
நட்பின் வயசாகும்...
இருந்தும் நினைவுகள்
எதுவும் குறையவில்லை...

உன்னை வாழ்த்த 
ஒரு பாட்டு போதாது - இருந்தும்
நீளம் கருதி நீட்டாமல் இன்று
பாட்டை சுருக்கி பாசம் பெருக்கி...

கன்னலும் தேனும்
கலந்த அன்பாகி...
உள்ளம் இணைந்த 
உன்னத வாழ்வை...

இன்றுபோல் என்றும்  
எல்லாமும் பெற்று...
பல்லாண்டு வாழ்க 
எல்லோரும் போற்ற...