Sunday, February 14, 2021

மனைவி



அம்மா
எனும் தெய்வம்
ஆயுள் முழுதும்
வரவியலாது என்பதால்
வரமாய் வந்தவள்...

பிறப்பு ஈந்த அன்னை
பின்னே வந்த தங்கை
கதைகள் சொன்ன பாட்டி
காதல் தந்த மனைவி
கவிதையாகும் மகள்
காலம் தந்த பேத்தி...

எல்லா நிலையிலும்
பெண்மை வெல்லும்...

விழியில் விழுந்து
இதயம் நுழைந்த
காதல் சொன்ன போழ்து
கண்கள் மிரள நின்றவள்
மனைவியான மறுநாள்
மாற்றத்தின் உச்சம் ...

நல்லது எல்லாம்
நமக்கு என்பாள்
துன்பம் வந்தால்
தன்னுள் வைப்பாள்...

விழியின் அசைவில்
விசயம் சொல்வாள்
வியந்து விளித்தால்
அணைத்துக் கொள்வாள்...

சின்ன மறதிக்கும்
சிணுங்கி நிற்பாள்
மிரண்டு நின்றால்
முரண்டு பிடிப்பாள்...

மகளாய் 
மனைவியாய்
அன்னையாய் 
அத்தையாய்
எல்லாவற்றையும்
எளிதாய் கடப்பாள்...

இருந்தும் நாம்
வியப்பின் விளிம்பில்
நின்ற போழ்தும்
என்னவர் இன்னும்
குழந்தை போல்தான்
விட்டுக் கொடுக்கா 
விந்தை செய்வாள்...

நம்பியார் கூட
நல்லவர் ஆவார்
மனைவி என்னும்
மந்திரம் முன்தான்...

ஆண்களுக்கு
இருபத்து ஐந்து வருடம்
எல்லாமே அம்மா - பின்
ஐம்பது வருடம்
மனைவிதான் எல்லாம்...

Friday, January 29, 2021

Fourth December

Fourth December
A day to remember
Four of the friends
Have their days
For two their Birth days
Other two their Wedding days
B'days to Mathi and Valsa
W'days to Mani and Usha
Mathi was room mate
In 2nd and 3rd years
Known Mani little bit
Met him not very often
No traction post 1982
Even Mathi kept his distance
For no reason, keeping his silence
Usha and Valsa
Just seen them in the campus
From the distance as far as E(CE) and T(ext)
WhatsApp has connected us
Gave the chance to wish on their days
Happy B'day to Mathi and Valsa
Happy W'day to Mani and Usha.
Have your days to the full

Friday, January 22, 2021

முதற் காதல்

அது ஒரு கிராமம்

நூறு வீடுகள் இருக்கும்.

ஒரு பள்ளி
இரு ஆசிரியர்கள்
வகுப்புக்கு
நாலைந்து வீதம்
இருபது மாணவர்கள்.

மக்கள் எல்லாம்
சொந்தம்
ஆசிரியர்கள் தாம்
ஆலோசகர்கள்.

மே முடிந்து
ஜூன் தொடக்கம்
ஒரு ஆசிரியர்
மாறுதலில் போக
புது ஆசிரியை வரவு.

வயது
இருபது பக்கம்
இளமை அழகு
எல்லாம் உச்சம்.

வகுப்பில் நால்வர்
ராம மூர்த்தி
மாரிமுத்து
ஜெய மோகன்
மற்றும் நான்
நால்வரில் சின்னவன்.

எப்போதும் போல்
புது ஆசிரியர்கள்
வரும்போதெல்லாம் 
கேட்கப்படும்
பொதுவான கேள்வி
படித்து முடித்து
என்ன வாகப் போகிறாய்.

ராமமூர்த்தி சொன்னான்
போலீஸ் என்று
மாரிமுத்து சொன்னான்
டூரிங் சினிமா ஆபரேட்டர் என்று
ஜெயமோகன் சொன்னான்
பெரியவன் ஆனபின்
ஆசிரியர் போன்று
அழகான பெண்ணை
திருமணம் செய்வேன் என்று.

அடுத்து நம் முறை
மனதுள் ஒருகேள்வி
எதற்கு பெரியவனாகும்வரை.

என்ன சொல்லியிருப்பேன்
என்பதை சொல்லக் கூடாது
ஏனென்றால் வயசு ஏழு
படித்தது இரண்டாம் வகுப்பு.

Thursday, January 14, 2021

போகி பண்டிகை


பழையன கழித்திட 

குப்பைகளை கிளறிய போழ்து

கிழிந்தும் கிழியாமலும் கிடந்த 

ஒரு மஞ்சள் தாளில் இருந்தது.

 

இறுதியாண்டில் (1982)

பிரிவு உபசார விழாவுக்கு 

 

"வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்":

 

என்ற பாட்டின் 

மெட்டுக்கு  எழுதியது  

நண்பன் வெங்கட் பாடினான்.

.................................................................

 

வாங்க நினைத்தால் வாங்கலாம்

துணியா இல்லை கடையிலே

ஆலை நூலும் சேலை ஆகும்

காசு இருந்தால் வாங்கலாம்.

 

வாங்க நினைத்தால் வாங்கலாம்

துணியா இல்லை கடையிலே

ஆலை நூலும் சேலை ஆகும்

காசு இருந்தால் வாங்கலாம்.

 

நூற்கத் தெரிந்தால் நுட்பம் புரியும்

நூற்பு முடிந்தால் நெய்தல் தொடரும்

நெய்தல் தொடர்ந்தால் துணிகள் தெரியும்

துணியை வெளுத்தால் வெண்மை கிடைக்கும்

வெண்மை கிடைத்தால் கடையில் சேரும்

கடையில் சேர்ந்தால் வாங்கலாம்

 

வாங்க நினைத்தால் வாங்கலாம்

துணியா இல்லை கடையிலே

ஆலை நூலும் சேலை ஆகும்

காசு இருந்தால் வாங்கலாம்.

 

கண்ணில் தெரியும் வண்ணத் துணிகள்

கடைக்குப் போனால் வாங்கலாம்

பருத்தி இழையின் மென்மை தெரியும்

பார்த்து பார்த்து வாங்கலாம்

நிறங்கள் பலவும் கண்ணை மயக்கும்

நம்மை மறந்து வாங்கலாம்

 

வாங்கச் சொன்னால் வாங்குவேன்

துணியா இல்லை கடையிலே

பருத்தி நூலில் நெய்த சேலை

பாத்து பாத்து வாங்குவேன்

 

பட்டு நூலின் மென்மை சாட்சி

பருத்தி துணியின் நிறங்கள் சாட்சி

துள்ளி ஓடும் Shuttle சாட்சி

துவண்டு நிற்கும் தறிகள் சாட்சி

 

ஐந்து வருடம் சேர்ந்து படித்து

ஒருவராக இருந்து மகிழ்ந்தோம்

 

வாங்க நினைப்போம் வாங்குவோம்

துணியா இல்லை கடையில்

பருத்தி துணியின் மேன்மை போலே

பருவம் தோறும் உடுத்தி மகிழ்வோம்

வாங்க நினைப்போம் வாங்குவோம்

துணியா இல்லை கடையில்

பருத்தி துணியின் மேன்மை போலே

பருவம் தோறும் உடுத்தி மகிழ்வோம்    

Monday, January 4, 2021

Endless Love (Since 1977)


PSG, thy name,

The cherishing pride,

Of the parents.

 

You were,

One of the eight then,

Now, there are 500 plus,

But, no one to match thy.

 

We came to you,

Like a baby in the cradle,

You sang the lullabies,

To awaken us.

 

You embraced us,

And taught the art,

To enlighten the soul,

And to remove the confusions.

 

You taught us,

All that matters,

To make us to stand tall,

Amongst the learned.

 

You too are like a mom,

Did all that a mother does,

Stood like a ladder,

To lift us to the sky.

 

If its deity, then

You are the one,

Chiseled us to be a statue,

Like a skilled sculptor.

 

All those came to you,

Won and gone – Still,

There are thousands,

In the queue to come.

 

Despite many new

Colleges came in,

No equal to thy,

You stand tall.

  

They say,

You are seventy – Still,

The youth and resilience,

Stand with thy.

 

I am now sixty plus,

Still, the love to you,

Remains to the heart,

 

Time has gone far,

Still the love bubbles,

If you can show some mercy,

I will pen many poems.

 

I know,

There is no chance,

That is not nature too,

Still, the longing remains.

 

The option to me is

To take another birth,

And come to you,

To rest on your lap.

 

Praying for your grace,

Will stand on one leg,

If you refuse,

My world will be gloomy.

 

I have one more appeal,

And seek your grace,

To have the same friends,

       Again and again.