Saturday, February 12, 2011

My Poems

A Week
It was a Monday morning
Hearing the clock alarming
Woke up with a hurried mind
Shaked up like a worried wind.
Rushed through the morning chore
Wished to have time, little more
Meeting with boss planned at ten
But, he was busy till one.
Waited, waited till his lunch
Without having my own lunch
At last got a chance at three
To be told, he isn't free.
Later started the day's work
The day was with full of jerk
Tuesday, Wednesday, what a bitter
Thursday, Friday, no way better.
Saturday is the end of the week
I am already terribly weak
Sunday, the God's gift,
That is the end of the week.

http://www.poetry.com/poems/a-week/6976855/


The Mother
You are the symbol of grace,
You are like a nice poem,
You have no parallel on earth,
No failure to those
Who understands you,
Moon is the symbol for beauty,
But, you are everything to the child,
Like the water beneath the sand,
You are in my mind for ever.
http://www.poetry.com/poems/the-mother/7759297/

The Water
Oh Friends,
Let's know the importance of water,
Else, We'll have to suffer later,
Water is in every one,
Without which, survives no one,
Animals need water,
Plants need water,
Our needs are greater,
It's nature's gift,
Let's not pollute,
Supply is short,
Let's not waste.
http://www.poetry.com/poems/water/151036/

Wednesday, February 9, 2011

தொலைந்த கிராமம்

கு முனியசாமி

மண் சுவர்
அகத்தி மரவிட்டம்
கொல்லம் ஓட்டுக் கூறை
கிழக்கு பார்த்த வாசல்
இடப்பக்கத் திண்ணையில்
அப்பாவின் அப்பா
கீழே கோழிக் கூண்டு
வலப்பக்கம் அடுப்பங்கரை
அண்டா குண்டா
பாணை பண்டம்
அம்மிக்கல்
வெண்ணை உறி

விறகு அடுப்பு
மேலே புகை போக்கி

முன்அறை நிலையின் மேல்
முருகன் கோவனத்தில்
இடப்பக்கம் அண்ணன்
வலப்பக்கம் நினைவில்லை
அடுத்த அறை மச்சு வீடு
ஒருபக்கம் சாக்கு மூட்டைகள்
மறுமக்கம் பருத்தி குவியல்
மூலையில் இரும்புப் பெட்டி

பின்புறம் மாட்டுத் தொழுவம்
இரண்டு காளைகள்
பத்து ஆடுகள்
ஒரு ஆட்டுக்கல்
இரு குழுதாடி
புண்ணாக்கு தண்ணி


இன்னும் பின்னே
ஒரு வேப் பமரம்
ஒரு புளிய மரம்
ஒரு மாட்டு வண்டி
கயிற்றுக் கட்டில்
வைக்கோல் படப்பு
சாணக் குவியல்
சுற்றி முள்வேலி
வடக்கு பார்த்து
அத்தை வீடு
அண்ண னுக்காக
வளர்ந்து வரும்
அழகு மயில் கோமதி

அருகில் ஒரு புறாக் கூண்டு

அதையும் தாண்டி
ஒரு சிறு கிடங்கு
மழைக் காலத்தில்
தவளை கத்தும்

இன்னும் போனால் ஓடை
இருகரையும் கருவேலி
திறந்தவெளிக் கழிப்பிடம்
மகளிர்க்கு மட்டும்
சொல்லாத நியதி
ஐப்பசி வந்தால்
தண்ணீர் போகும்
அழுக்குகளும் சேர்ந்து போகும்

வடக்கு எல்லையில்
கிழக்கு நோக்கி பிள்ளையார்
வலப்பக்கம் தம்பி முருகன்
அதர்க்கடுத்து முத்து மாரி
வடக்கு பார்த்து காளி
அதர்க்கும் வடக்கே ஊரணி

கிழக்கே ஆரம்பப் பள்ளி
ஒரே டீச்சர்
பெயர் உண்டு வளர்ந்தாள்
உண்மைப் பெயர் தெரியவில்லை
முன்னால் கொடிக்கம்பம்
பின்னால் சிறு தோட்டம்
ஒரு முருங்கை மரம்
ஒரு வாகை மரம்

தெற்கு எல்லையில்
சோளக் காடு
இன்னும் போனால்
மிளகாய் தோட்டம்
நடுவில் கிணறு
வற்றாத ஊற்று

கரிசல் காட்டில்
கம்புப் பயிர்
காதலர் ஒதுங்க
மஞ்சள் அத்தி புதர்
கன்னிமார் கோயில்
கருப்பன் என்கிற
காவல் தெய்வம்
குதிரை மேலே
அதிரும் தோற்றம்
குலையும் நடுங்கும்
கோபப் பார்வை

ஊரின் நடுவில் சாவடி
ஒருபக்கம்
சிறுசுகளின் குதுகூலம்
மறுபக்கம்
பெறுசுகளுக்கு தாயக் கட்டம்
மாலை நேரத்தில்
ஊர் பஞ்சாயத்து

பெண்கள்
பிரம்மன் வியக்கும்
பெருமை சேர்க்கும்

மறைத்தும் மறையா
மன்மத ஓவியம்
காமம் தூண்டா
கவிதை உணர்வு
பாட்டிகள்
வளர்ந்த காதுகள்
அசைந்து ஆடும் பாம்படங்கள்
ஆண்கள்
இடையில் கோவணம்
தலைப்பா கையுடன்
காந்தியின் வாரிசுகள்..

நாராயணசாமி நாயிடு
மாமா முறை
நகை ஆசாரி
சித்தப்பா முறை
கோயில் பூசாரி
அண்ணன் முறை
சித்ரவேல் பண்டாரம்
இன்னொரு மாமா

நாராயண சாமி மகள்
பத்மா மீது
நமக்கு ஒரு ஜில்லு
சித்ரவேல் தங்கை
சுலோச்சனா மீது
அண்ணனுக்கு ஒரு இது

சாவு என்றால்
ஊர்கூடி அழும்
சடங்கு என்றால்
ஊரெல்லாம் பாடும்
கல்யாணம் என்றால்
ஊரெல்லாம் தில்லானா
சாதி கடந்த
வெள்ளந்தி மனிதர்கள்

இன்று
ஒருபக்கம் தீப்பெட்டி
மறுபக்கம் பட்டாசு
மழை என்பது
மறந்து போச்சு
கிணரெல்லாம்
வத்தி போச்சு
விவசாயம்
செத்து போச்சு
பள்ளிக் கூடம்
இடிஞ்சு போச்சு
பட்டாசு வேலை
கெடச்சு போச்சு
கள்ளச் சாராயம்
மலிஞ்சு போச்சு

பழையது எதுவும்
இன்று இல்லை
பாதி மனிதர்கள் பரலோகத்தில்
மீதி இங்கும் அங்கும் எங்கும்
போன இடம் தெரியவில்லை
கருப்பு வெள்ளை படமாய்
எனது கிராமம்
தொலைந்து போச்சு.

பட்டாளத்து மாமா

பட்டாளத்து மாமா
-----------------------------

கரியநெடு உருவம்
கம்பீர நடை
அருவா மீசை
அலைபாயும் விழிகள்
வெள்ளை வேட்டி
வீரம் சொல்லும் தலைப்பாகை
பெயர் காரணத்துக்கு
ஒரு கதை உண்டு.........

நாப்பதுகளில்
இரண்டாம் உலகப் போருக்கு
ஆள்பிடித்த நேரம்
கிராமத்து இளைஞர்கள்
ஓடி ஒளிந்த போது
மாமா மட்டும் தைரியமாய்
வெள்ளைத் துரையின்
பின்னே போனாராம்
அதனால் வந்த
பட்டம் பட்டாளம்............

இரண்டு ஆண்டுகள்
பர்மா எல்லையில்
பதுங்கி இருந்ததை
மாமா சொல்லும் தோரணையில்
ஊரே மெய்மறந்து கேக்கும்..........

எங்கள் ஊரில்
நேதாஜியை
நேரில் பார்த்த ஒரே மனிதர்.........

பர்மா விலிருந்து
பெர்லின் போகச்
சொன்ன போது
தப்பி ஓடி
தாய்லாந்து போனது
ஒரு கதை.........

அங்கிருந்து
சிங்கப்பூர் சென்று
சீனாக் காரியை மணந்து
சின்னராசுக்கு அப்பா ஆனது
இன்னொரு கதை......

ஜப்பான் காரன்
சிங்கப்பூரை தாக்கியபோது
தப்பிப் பிழைத்து
தமிழகம் வந்தது
மற்றொரு கதை...........

போருக்குப் பின்
சிங்கப்பூர் போனவருக்கு
பெரும் அதிர்ச்சி
சீனாக் காரி
மூனாவது கணவனின்
நாலாவது குழந்தையுடன்
நான் அவளில்லை என்றாள்..........

மகனைத் தேடி
மலேசியாவில் அலைந்த போது
ராமசாமி ரஹ்மான் ஆகி
ரப்பர் தோட்டத்து
ரஷிதாவுடன் மறுமணம்
துரதிர்ஸ்டம்
காச நோயிக்கி
ரஷிதா பலி...........

சிங்கம் போல் இருந்தவர்
சிதைந்து போனார்
தேகம் மெலிந்து
பார்வை மங்கி
பகட்டுக் குறைந்து
ஊர் திரும்பிய மாமாவுக்கு
பேர் சொல்ல
யாரும் இல்லை...........

பட்டாளத்தை விட்டு
பாதியிலே வந்ததனால்
ஓய் ஊதியம் கிட்டவில்லை
ஊரும் மதிக்க வில்லை
இன்னொரு குடும்பம்
ஏற்படுத்த தெம்பில்லை..........

இருக்க இடமின்றி
பிழைக்க வழிதேடி
ஊர்க்காவல் வேலை
மாதக் கூலி
ஏக்கருக்கு ரெண்டு ரூபாய்
காலைமுதல் மாலைவரை
காடெல்லாம் அலைவதும்
ஆடு மாடு மேய்ப்பவரை
அதட்டி விரட்டுவதும் வேலை............

பக்கத்து ஊர்
சின்னவாடியில்
முத்தழகு என்றொரு
முதிர் அழகு
முன்னும் பின்னும் சதிரழகு
முதுமையும் விளிக்கும்
மோகத்தை நினைக்கும்
மொத்தத்தில்
ஐம்பது வயது
ஐஸ்வர்யா............

ஐம்பதும் அறுபதும் பார்த்தது
அருகில் அருகில் ஈர்த்தது
பருவம் மறந்து வேர்த்தது
பரவசம் ஆகி தோற்றது
கம்மாக் கரையிலும்
கருவேலை புதரிலும்
முத்தழகுடன்
மூன்றாவது யாகம்............

முப்பது வயதில்
விதவை யான
முத்தழகுக்கு
மூன்று மகன்கள்
வளர்ந்து நிமிர்ந்த
வாலிபப் பையன்கள்
முதுமைக் காதல்
அசிங்கம் என்றனர்
மோகம் என்பது
பாவம் என்றனர்
சாதியும் நடுவில்
சங்கடம் தந்தது
சாவே அதற்கு
சாபம் என்றது...............

அண்ணன் தம்பிகள்
அமர்ந்து பேசினர்
முடிவே முடிவென்று
முடித்து விட்டனர்
காவல் வந்தது
உடலை அறுத்ததில்
உணவில் விசம்
ஊர்கூடி அழுதது
ஒருவாழ்வும் முடிந்தது.........

மறுநாள்
மலேசியாவி லிருந்து
மாமாவுக்கு ஒரு கடிதம்
அனுப்புனர் சின்னராசு.........

வேண்டுதல்

கு. முனியசாமி


மான்போல் துள்ளும்

இளமை வேண்டும்

மயில்போல் ஆடும்

திறமை வேண்டும்

வான்போல் பரந்த

மனம் வேண்டும் - நாடு

வறுமையை வென்ற

நிலை வேண்டும்...

ஆனென்ற அகந்தை

அகன்றிட வேண்டும்

அறியாமை இருள்நம்மை

விலகிட வேண்டும்

ஏனென்ற கேள்வி

எழுந்திட வேண்டும் - எங்கும்

இல்லாமை இல்லை

என்பது வேண்டும்...

காதலைப் போற்றும்

பெற்றவர் வேண்டும்

கவிதையை ரசிக்கும்

நண்பர்கள் வேண்டும்

இசையை ரசிக்க

தெரிந்திட வேண்டும் - ஈதல்

இலையெனி லன்றே

சாதல் வேண்டும்...

ஊருக்கு உழைக்கின்ற

உள்ளங்கள் வேண்டும்

ஒற்றுமைதான் உயர்வு

உணர்ந்திட வேண்டும்

வைகையில் கங்கை

கலந்திட வேண்டும் - நம்முள்

வங்கமும் சிந்துவும்

இணைந்திட வேண்டும்...

இலங்கையில் அமைதி

திரும்பிட வேண்டும்

ஈழம் உதிக்க

உதவிட வேண்டும்

புஸ்ஸும் சதாமும்

கைகொள வேண்டும் - என்றும்

புவியில் அமைதி,

ஒற்றுமை வேண்டும்...

சொல்லுவதெல்லாம்

கு.முனியசாமி

காதலின் வலியைத்
தாடி சொல்லும்
காவிரிப் பெருக்கை
ஆடி சொல்லும்

காற்றின் திசையை
நாணல் சொல்லும் - இளம்
கன்னியர் மனதை
நாணம் சொல்லும்...

வானின் அழகை
மேகம் சொல்லும்
வறுமையின் கொடுமை
தேகம் சொல்லும்...

தந்து உண்பதை
காகம் சொல்லும் - தண்ணி
தராமை என்பதை
கன்னடம் சொல்லும்...

அடக்கம் என்பதை
ஆமை சொல்லும்
அஞ்சாமை, வீரம்
ஆண்மை சொல்லும்....

இருப்பது குறையென
ஆசை சொல்லும் - நிலை
இல்லமை நிலையென
ஞானம் சொல்லும்...

பூக்களின் மேன்மை
வாசம் சொல்லும்
புன்னகை கோடி
நேசம் சொல்லும்

அன்னையின் வார்த்தை
பாசம் சொல்லும் - ஜன்னல்
கம்பிகள் ஆயிரம்
காதல் சொல்லும்....

அழகு...

கு.முனியசாமி

துள்ளி ஓடும் மான் அழகு

துயில் கொள்ளும் சேய் அழகு

விண்ணிலே நிலவழகு

விதையிலே கருவழகு...

மண்ணிலே நதி அழகு

மனதிலே ஜதி அழகு

நதியிலே நீர் அழகு

நல்ல தோர் பேர் அழகு...

காலையில் இருள் அழகு

கவிதையில் பொருள் அழகு

வில்லுக்கு அம்பழகு

வில்லனுக்கு வம்பழகு

சொல்லுக்கு சுவை அழகு

சொல்லாமை ஓர் அழகு...

பெண்ணுக்கு நகை அழகு

பின்லேடனுக்கு குகை அழகு...

also in thinnai.com

http://www.thinnai.com/?module=displaystory&story_id=302032412&format=html

Monday, February 7, 2011

ஏன் அதை மட்டும் !


கு.முனியசாமி.

அம்மாவின் கைதொட்டு

அழுது புறண்டு

அகரம் பயிலச் சென்ற

அந்த நாளும் மறந்து போகும்...

மணமக ளாகி

மாமா கைபிடித்து

அக்கா பிரிந்து சென்ற

அந்த நாளும் மறந்து போகும்...

கண்கள் மிறள

கால்கள் துவழ

கல்லூ ரிக்குள் நுழைந்த

அந்த நாளும் மறந்து போகும்...

படிப்பை முடித்து

பரவசம் மேற்கொண்டு

நண்பரைப் பிரிந்து நின்ற

அந்த நாளும் மறந்து போகும்......

முயற்சிமேல் முயற்சி செய்து

முருகனுக்கு முடிகொடுத்து

முதன்முதலாய் வேலை சேர்ந்த

அந்த நாளும் மறந்து போகும்......

கல்யாண வேளைவந்து

களமிறங்கிப் பெண்பார்த்து

கயல்விழியை மணந்து கொண்ட

அந்த நாளும் மறந்து போகும்...

மகன்பிறந்த செய்திகேட்டு

மனமெல்லாம் உவகை கொண்டு

மணைவியைக் காணச் சென்ற

அந்த நாளும் மறந்து போகும்...

மகளுக்கும் மணமுடித்து

மற்றதெல்லாம் செய்துவித்து

தாத்தா வான செய்திவந்த

அந்த நாளும் மறந்து போகும்...

வயதாகிப் பல்விழுந்து

வாழ்க்கையின் ஓரத்தில்

வடுக்களை எண்ணி நிற்கும்

அந்த நாளும் மறந்து போகும்...

எதனை மறக்க முடிந்தாலும்,

எட்டாவது படிக்கையிலே

கொட்டாவி விட்டவரை -

தலையில் கொட்டடா

என்ற போழ்து...

வாத்தியார் மகளை மட்டும்

வலிக்காமல் தொட்டுவிட...

வம்புக்காய் நண்பன்

காதலா என்ற போழ்து...

நெஞ்சில்,

ஜில்லென முள்ளொன்று

தைத்ததையும்...

உள்ளம்,

பஞ்சென வானில்

பறந்ததையும்...

உயிர்,

தீயினைத் தொட்டதாய்

சுட்டதையும்...

மறக்க முடிய வில்லை

also in thinnai.com

SELF ESTEEM


Our overall performance is based on how we perceive ourselves. If we have low self-esteem, it often hinders us from succeeding in life. We may achieve some of our tasks, but often we fail to set goals that back plans to our success.

Our success, performance to handle daily tasks, and making good decisions depend on our attitude. If we are tired, stressed, worried, in pain or any other negative feelings, our daily performance and long term as well will not be that great.

When we use techniques for enhancing our self-esteem, we will feel good when waking up in the morning to face any challenges that may come our way. When we have good self-esteem, we make better decisions, which encourage others to want to be around us. When we have self-esteem, our confident reaches its peak and we will feel better about our day as we solve different problems that might come our way.

We have many options to build our self-esteem, confidence, etc. Each strategy will give us more energy, and relieve pain as well. Build up your personal health and performance as we build up our self-esteem. Some of the best techniques you can use to enhance self-esteem include writing. Setting goals is another technique to use to enhance self-esteem.

How writing a journey and setting goals help you:
Writing a journal will enhance our self-esteem, confidence and relieve pain that is caused by stress. Journal writing will let you blow off how you feel without anyone knowing your privacy. You can talk to yourself on paper and reread it as you go along to see how well your writing will change as you begin to feel better about your success in building up self-esteem.

Goals help to give up a better performance by building up self-esteem. They need to be in writing along with how you can reach your goals as each day passes you by. Goals give you a reason to work on how you feel in order to accomplish them to be successful.

You can relieve pain with goals by relieve some of the stressful things that are going on with your life. Stress causes pain and relieving the stress will help you perform better in making your decisions to building up your self-esteem.

Exercise can help us perform better by relieving stress that causes pain. We will be able to make better decision by exercising and giving us a time out time for you. We will be able to sleep better at night to perform by enhancing our self-esteem with better decision-making skills.

Positive thing will help us in our performance for the future to success. Positive thinking helps us to forget the negative things that tell us we cannot do something. With positive thinking if we make a mistake do it again only with a positive attitude that you can do it right once you learn what way to perform the best.

Our self-esteem plays a lot in the role of controlling our lives. Without self-esteem is it, harder to perform like we want to. We need to unleash our mind power to make changes to build up the self-esteem in our lives.

It takes a lot of skill and practice to changes our ways of doing things but by thinking positive, we can and will do the best performance ever. Practice keeps us fit and healthy, especially when we practice to enhance our self-esteem.

Start today to make the changes to be a happier person. Build up your performance by building up your self-esteem to a better, healthier, and happier future for success.

Sunday, February 6, 2011

கூட்டம்...


கு.முனியசாமி

வயிற்றை நிரப்ப

வழியொன்று தேடி

வருமையில் நடக்கும்

ஒரு கூட்டம்...

வயிற்றைக் குறைக்க

பார்க்கினில் நடக்க

காரினில் போகும்

ஒரு கூட்டம்...

காய்ந்த வயிறுடன்

தூக்கம் துறந்து

பாதையில் உருளும்

ஒரு கூட்டம்...

உண்ட உணவு

செரிக்க வேண்டி

மருந்துகள் தேடும்

ஒரு கூட்டம்...

உடலை மறைக்க

ஆடை யின்றி

இருளைத் தேடும்

ஒரு கூட்டம்...

அரைகுறை ஆடையில்

அழகைக் காட்ட'

வெளிச்சம் போடும்

ஒரு கூட்டம்...

நடிகனின் உருவைப்

பச்சை குத்தி

இளமையைத் தொலைக்கும்

ஒரு கூட்டம்...

மரத்தைச் சுத்தி

ஆட்டம் போட்டு

காதல் என்கும்

ஒரு கூட்டம்...

அரைகுறைப் படிப்புடன்

அரசியலில் நுழைந்து

அராஜகம் செய்யும்

ஒரு கூட்டம்...

அறிவு ஜீவியாய்

கைகளை மடக்கி

சேவகம் செய்யும்

ஒரு கூட்டம்...

மதமென்ற பேரில்

மடமையைப் புகுத்தி

வன்முறை செய்யும்

ஒரு கூட்டம்...

ஒருவனைப் பிடிக்க

உலகினைத் திரட்டி

ஆஃகானை எரிக்கும்

ஒரு கூட்டம்...

இத்தனை பார்த்தும்

எதுவும் செய்யாது

தன்னலம் தேடும்

தனிக் கூட்டம்...

Also published in thinnai.com

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30112024&format=html