Saturday, September 12, 2020

பாரதி (நினைவு நாள் 11 செப்).

எண்ணங்க ளாலே விண்ணை அளந்தவன்
எண்ணில் அடங்கா கவிதை தந்தவன்
எதுகை மோனையை எளிதில் வென்றவன்
எதற்கும் அஞ்சா இதயம் கொண்டவன்....

மண்ணில் நின்று விண்ணைத் தொட்டவன்
மனிதம் வென்றிட மாண்பு சொன்னவன்
கவிதை செய்தே கவலை கொன்றவன்
கவிஞருக் கெல்லாம் அப்பனாய் நின்றவன்...

முப்பது கோடிக்கும் முழக்கம் செய்தவன்
முப்பத்து ஒன்பதில் உலகை விடுத்தவன்
எப்பொழு தும்எம் நினைவில் நிற்பவன்
எங்கள் கவிஞன் பாரதி வாழ்க.....

No comments: