கு.முனியசாமி
காதலின் வலியைத்
தாடி சொல்லும்
காவிரிப் பெருக்கை
ஆடி சொல்லும்
காற்றின் திசையை
நாணல் சொல்லும் - இளம்
கன்னியர் மனதை
நாணம் சொல்லும்...
வானின் அழகை
மேகம் சொல்லும்
வறுமையின் கொடுமை
தேகம் சொல்லும்...
தந்து உண்பதை
காகம் சொல்லும் - தண்ணி
தராமை என்பதை
கன்னடம் சொல்லும்...
அடக்கம் என்பதை
ஆமை சொல்லும்
அஞ்சாமை, வீரம்
ஆண்மை சொல்லும்....
இருப்பது குறையென
ஆசை சொல்லும் - நிலை
இல்லமை நிலையென
ஞானம் சொல்லும்...
பூக்களின் மேன்மை
வாசம் சொல்லும்
புன்னகை கோடி
நேசம் சொல்லும்
அன்னையின் வார்த்தை
பாசம் சொல்லும் - ஜன்னல்
கம்பிகள் ஆயிரம்
காதல் சொல்லும்....
Wednesday, February 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment