Friday, December 25, 2020

2020

இருபது இருபது எப்படி விளிப்பது
ஒன்னும் புரியல ஊருக்கும் விடியல...

பிரமாண்டம் என்றார் ஜனவரியில் - தடம் 
புரண்டது என்றார் பெப்ருவரியில்
மணிஅடி என்றார் மார்ச்சில் - வேண்டும்
மருந்துகள்  என்றார் ஏப்ரலில்...

மேம்படும் என்றார் மேயில் - மெல்ல
மெலியும் என்றார் ஜுனில்
குறையும்  என்றார் ஜூலையில் - கோபம்
குறைத்திடு  என்றார் ஆகஸ்டில்...

சிதைந்து மெலிந்தது செப்டம்பர் - சீக்கிரம்
அசைந்து முடிந்தது அக்டோபர்
நகர்ந்து போனது நவம்பர் - நல்ல
நாள்தான் வருமோ விரைவில்...

டிசம்பரும் முடியப் போகுது - நம்
சிந்தையில் மிரட்சி ஓங்குது
முடியுமா இந்த சோகம் - விரைவில்
விடியுமா நமக்கு நாளும்...

No comments: